தஞ்சை: தஞ்சை பெரியகோயிலின் ஆயிரம் ஆண்டு நிறைவு விழா இன்று மாலை தொடங்கி 5 நாட்கள் நடைபெறுகிறது. தமிழர்களின் வீரத்திற்கும், கட்டிட கலைக்கும் சான்றாக விளங்குகிறது தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம். போரில் வெற்றிகண்ட மன்னன் ராஜராஜசோழன் வெற்றிச்சின்னமாக கட்டிய இந்த கோயில் ஆயிரம் ஆண்டுகளை நிறைவு செய்து இன்னும் கம்பீரமாக காட்சியளிக்கிறது. பெரிய கோயில் என்று அழைக்கப்படும் இந்த கோயிலை உலக பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ நிறுவனம் அறிவித்து உள்ளது.
பெரிய கோயிலின் ஆயிரம் ஆண்டு நிறைவு விழாவை தமிழக அரசு இன்று முதல் 5 நாட்கள் தஞ்சையில் கோலாகலமாக கொண்டாடுகிறது. இதையொட்டி கலைநிகழ்ச்சிகள், கருத்தரங்குகள், ஆய்வரங்குள் நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. விழாவுக்காக தஞ்சை நகரில் பல்வேறு அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்பட்டு நகரம் அழகுபடுத்தப்பட்டு விழாக்கோலம் பூண்டுள்ளது.
இன்று மாலை 5.30 மணிக்கு பெரியகோயிலில் தொடங்கும் விழாவில், சீர்காழி சிவசிதம்பரம், சுதா ரகுநாதனின் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
பாதுகாப்பு பணியில் 10 ஆயிரம் போலீசார் ஈடுபடுகின்றனர். குற்றங்களை தடுக்கும் வகையில் நகரில் 21 இடங்களில் சுழல் கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. சிறப்பு காவல் கட்டுப்பாட்டு அறையும் திறக்கப்பட்டு உள்ளது.
பெரியகோயில் ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழா நிகழ்ச்சிகள் அனைத்தையும் உலகம் முழுவதும் மக்கள் பார்த்து ரசிக்கும் வகையில் www.thanjavur.tn.nic.in/ bibtemple/btcontact.htm/ என்ற இணைய தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
Confidence may not bring success but
It gives a heart to face any challange..!